என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா"
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 240 ரன்கள் குவித்தது.
நவி மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்னும், திலக் வர்மா 19 பந்தில் 45 ரன்னும், அக்சர் படேல் 23 பந்தில் 35 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 21 பந்தில் 44 ரன்னும், மார்க்ரம் 19 பந்தில் 38 ரன்னும், ஜேசன் ஸ்மித் 35 ரன்னும், மார்கோ யான்சென் 31 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் 45 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின .
- முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதின .
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. இதையடுத்து 311 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது.
- இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும்.
ஹராரே:
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதுகின்றன.
5 முறை சாம்பியனான இந்திய அணி லீக்கில் அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்தையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, பாகிஸ்தானையும் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் அபிக்யான் குண்டு (199 ரன்), 'அதிரடி புயல்' வைபவ் சூர்யவன்ஷி (196), விஹான் மல்கோத்ரா (172), வேதாந்த் திரிவேதி சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் தொடக்கம் தான் திருப்திகரமாக இல்லை. தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் ஒரு முறை கூட எடுக்கவில்லை. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹெனில் பட்டேல், அம்ப்ரிஷ் (தலா 11 விக்கெட்), ஹிலான் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கும் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கிலும் கணிசமாக ரன் எடுத்தால் பேட்டிங் மேலும் வலுவடையும்.
ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தான்சானியாவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்தையும் வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பைசல் ஷினோஜதா (325 ரன்), உஸ்மான் சதத் (183), கேப்டன் மக்பூப் கானும் (178), பந்து வீச்சில் நூரிஸ்டானி ஓமர்ஜாய், அப்துல் அஜிசும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வலுவான இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சவாலை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு எளிதான விஷயமாக இருக்காது. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
- உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தன.
- ஜனவரி முதல் மூன்று வாரங்களில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா, இந்தியாவுடனான தனது உறவுகளை அனைத்து சாத்தியமான வழிகளிலும் தொடர்ந்து வளர்க்க விரும்புவதாகவும் பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா முன்வந்துள்ளது என ட்ரம்ப் நேற்றுக்கூறிய நிலையில், "இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து மாஸ்கோவிற்கு இதுவரை எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை" என்று பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா 88% கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களாக மாற்றப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு வரை இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு வெறும் 0.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தன. இதனைத் தொடர்ந்து, தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
இருப்பினும், 'கெப்லர்' நிறுவனத்தின் தரவுகளின்படி, ஜனவரி முதல் மூன்று வாரங்களில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது. இது 2025-ன் பாதியில் 2 மில்லியன் பேரல்களாகவும், கடந்த டிசம்பரில் 1.21 மில்லியன் பேரல்களாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
- இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இரு நாட்டு பகைமை உணர்வு ஆட்டத்திலும் எதிரொலிப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண தவம் கிடப்பார்கள்.
அந்த வகையில் விரைவில் தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.
ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை 'வெட்டு' விழும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும்.
ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.315 கோடியாகும். ஒப்பந்த விதியை மீறி உலகக் கோப்பை ஆட்டத்தை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
- இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
- கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திருப்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
அந்தவகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமல்படுத்தினார். அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தினார்.
இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.
திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
எனவே வரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும், அமெரிக்க வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் திருப்பூர் ஆடை வர்த்தகம் அமெரிக்காவை நம்பியே இருப்பதால் வரியை குறைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் திருப்பூர் ஆடை வர்த்தகம் முற்றிலும் முடங்கும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர்(ஏ.இ.பி.சி.) சக்திவேல் கூறுகையில்,
அமெரிக்காவின் வரி குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு எங்களது சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிக்குறைப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த வருடமே மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,
இந்த வரிகுறைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். குறிப்பாக பெனால்டி வரியை முற்றிலுமாக குறைத்து. அடிப்படை வரியிலும் 7 சதவீதம் குறைத்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நமது போட்டி நாடுகளான வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட குறைவான வரி விதித்து இருப்பதால்ஆயத்த ஆடை தொழிலுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இந்த வரி குறைப்பு காரணமாக ஆய்த்த ஆடை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில்,
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.
திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி:-
இந்திய-ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த சமயத்தில், அமெரிக்காவும் இந்தியாவுடன் வரிச்சலுகை ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கனவு இன்று நினைவாகிவிட்டது. திருப்பூர் இனிமேல் மின்னல் வேகத்தில் முன்னேறும் காலம் உறுதியாகிவிட்டது. இதற்கு ஒத்துழைத்து உதவிய மத்திய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர்:-
திருப்பூர் பின்னலாடைத்தொழிலுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிச்சயம் இது தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள தொழில் நிலையில் இருந்து பல மடங்கு வளர்ச்சியை நாம் காணப்போகிறோம். ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்புசாமி:-
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் சற்று நலிவடைந்து காணப்பட்டது. தற்போது இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் ஜாப் ஒர்க் தொழில் துறையினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். ஏற்றுமதியும், உள்நாட்டு தொழிலும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இனி வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும் என்று நம்புகிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கம்:-
திருப்பூர் தொழில் துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக விடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது தற்போது நினைவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் வரிவிதிப்பில் சற்று இறங்கி வந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.
அதே நேரம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த வரியை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
- U19 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பதற்கான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சய்யாம், அப்துல் சுப்ஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. ஹம்சா ஜஹூர் 42 ரன்னிலும் உஸ்மான் கான் 66 ரன்னிலும் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 46.2 ஓவர்கள் முடிவில் 194 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8 புள்ளிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
- இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பதற்கான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சய்யாம், அப்துல் சுப்ஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகள் பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ்தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளியுடன் அரையிறுதியில் நுழைந்தது.
- சூப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் முடிகிறது.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.
சூப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் முடிகிறது. புலவாயோவில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில் 2-வதாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.
இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும்.
பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகள் பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ்தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய அணி இந்தத் தொடரில் தோல்வியை தழுவவில்லை. லீக் சுற்றில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், வங்க தேசத்தை 18 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வேயை 204 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் 36 ரன்னில் தோற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
- நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மக்களுக்கு தொற்றும் அபாயம் உள்ளது.
- இதனால் வர்த்தகம், பயண விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிஷ்கேக்:
இந்தியாவில் இருந்து வாங்கும் இறைச்சி மற்றும் மாடு, ஆடு, கோழி, பன்றிகளின் இறக்குமதிக்கு கிர்கிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மக்களுக்கு தொற்றும் அபாயம் உள்ளது. இதனால் வர்த்தகம் மற்றும் பயண விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் இறைச்சி உள்பட விலங்குகளில் இருந்து கிடைக்கும் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், நம் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்ட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் மக்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பயணிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளது என்றும், தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பல நூற்றாண்டுகள் நீடித்து நிற்கும் இந்த உயிருள்ள வேர் பாலங்கள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
- யுனெஸ்கோ என்பது ஐ.நா. சபையின் ஒரு சிறப்பு அமைப்பாகும்.
ஷில்லாங்:
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா அதிக காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநில மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்காக காடுகளையே நம்பி உள்ளனர். இங்கு அதிக மழையால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகிறது, இதனால் கான்கிரீட் சாலைகள் மற்றும் இரும்பு பாலங்களை உருவாக்குவது கடினம்.
இதனால் அங்குள்ள காசி, ஜெயந்தியா மலைகளின் பழங்குடியினரின் தாங்கள் அடர்ந்த காடுகள் வழியாக பயணிக்க பிகஸ் ரப்பர் மரங்களின் வேர்களில் இருந்தே பாலங்களை உருவாக்குகின்றனர். இந்த பாலங்கள் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும் நீரோடைகளையும் கடக்க மக்களுக்கு உதவுகின்றன. பல நூற்றாண்டுகள் நீடித்து நிற்கும் இந்த உயிருள்ள வேர் பாலங்கள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இந்த வாழும் வேர் பாலங்கள் ஆற்றின் இரு முனைகளிலும் உள்ள ரப்பர் மரத்தின் வேர்களை மூங்கில் துண்டுகளுடன் பிணைக்கிறார்கள். இதன் மூலம் வேர்கள் வளர்ந்து பாலங்களாக உருவாகிறது. இதுபோன்ற 100-க்கும் மேற்பட்ட பாலங்கள் மேகாலயா முழுவதும் பரவியுள்ளன.
மேகாலயாவின் இந்த வாழும் வேர் பாலங்களை 2026-27-ம் ஆண்டுக்கான உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கான பரிசீலனைக்காக, அதன் பரிந்துரை ஆவணங்களை பாரீசில் உள்ள யுனெஸ்கோ அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சமூக வலைதளத்தில், "யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி யான விஷால் வி ஷர்மா மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள் தொடர்பான ஆவணங்களை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையத்தின் இயக்குனர் லசாரே அஸ்ஸோமோ எலோண்டூவிடம் ஒப்படைத்தார். இந்த ஆண்டு வாழும் வேர் பாலங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் இந்த வாழும் பாரம்பரியத்தின் உண்மையான பாதுகாவலர்களான பழங்குடி சமூகங்கள், அவர்கள் தகுதியான உலகளாவிய அங்கீகாரத்தை பெறுவதை இது உறுதி செய்யும்" என கூறியுள்ளார்.
யுனெஸ்கோ என்பது ஐ.நா. சபையின் ஒரு சிறப்பு அமைப்பாகும். இது கல்வி, அறிவியல், கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை மற்றும் கலாச்சார இடங்களை பாரம்பரிய தளங்களாக பட்டியலிடுகிறது.
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
- ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையான அங்கீகாரம் கிடைக்கும்
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் இனி எளிதாக நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக IT, ITeS, கல்வி, நிதிச் சேவைகள், சுற்றுலா, கட்டுமானம், தொழில்முறை ஆலோசனைகள் உள்ளிட்ட 144க்கும் மேற்பட்ட ஐரோப்பிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் அல்லது சுயதொழில் செய்யும் நிபுணர்கள் இனி எளிதாக நுழைய முடியும்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையான அங்கீகாரமும், சமமான வாய்ப்புகளும் இந்திய நிறுவனங்களுக்கு இனி வழங்கப்படும்.
இந்தியாவில் இருந்துகொண்டே ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் நிபுணர்களுக்கும், தற்காலிகமாக அங்கு சென்று பணிபுரியும் நிபுணர்களுக்கும் இது உதவும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.






