'Thank You People Of India' - ஈரான் ஏவுகணைகளில் இடம் பெற்ற 'நன்றி' வாசகம்!

ஈரான் இன்று தாக்குதலுக்கு பயன்படுத்திய தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'Thank You People Of India' என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது.
'Thank You People Of India' - ஈரான் ஏவுகணைகளில் இடம் பெற்ற 'நன்றி' வாசகம்!
Published on

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக, இன்று ஈரான் தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது ஏவப்பட்ட அந்த ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி என ஈரான் எழுதியுள்ளது. மேலும் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு ஈரான் ராணுவம் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் சேமிப்புப் பணம், நகை மற்றும் ஆடு, மாடுகளைக் கூட ஈரானுக்கு மனிதாபிமான உதவியாக வழங்கியதை ஈரான் தூதரகம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தது.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, தங்களது 83வது கட்டத் தாக்குதல்கள் இன்று நடந்ததாகவும், இதில் நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கலந்து பயன்படுத்தப்பட்டு, இஸ்ரேலில் உள்ள இடங்கள் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இடங்கள் உட்பட வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள இராணுவத் தளங்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

போர் பதற்றங்களுக்கு இடையிலும், இந்தியா போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com