

மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
எரிசக்தி துறையில் சுய சார்புடன் இருப்பதில் நாடு வளர்ச்சி கண்டு வருவதுடன், முக்கிய ஆலைகளுக்கு தேவையான எரிபொருள் வினியோகம் தடைபடாமல் இருப்பதும் உறுதி செய்யப்படுவதில், அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது முக்கிய மைல்கல்லாகும்.
நிலக்கரி சார்ந்த அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அபரிமித அளவிலான நிலக்கரி இருப்பை பராமரித்து மின் துறைக்கு ஆதரவான செயல்பாட்டை அரசு எடுத்து வருகிறது.
இந்த தொடர்ச்சியான அதிக அளவிலான நிலக்கரி உற்பத்தி அளவானது, அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை திறம்பட எதிர்கொள்ள உதவுகிறது என தெரிவித்துள்ளது.