அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டியில் விளையாடும் இந்தியா - அட்டவணை வெளியீடு

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 2 டி20 போட்டிகளை விளையாட உள்ளது
INDIA'S TOUR OF IRELAND 2026
INDIA'S TOUR OF IRELAND 2026
Published on

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் வருகிற ஜூன் மாத வாக்கில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதையடுத்து அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 2 டி20 போட்டிகளை விளையாட உள்ளது

இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஜூன் 26 ஆம் தேதி முதல் டி20 போட்டியில் ஜூன் 28 ஆம் தேதி 2 ஆவது டி20 போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com