ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் கோவிலில் 40-ம் ஆண்டு குருபூஜை விழா

சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் கோவிலில் 40-ம் ஆண்டு குருபூஜை விழா
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அணைக்கட்டு பகுதியில் ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. மேலும் மும்முனிவர், மவுன குரு சாமிகள் உள்ளிட்ட பிரகார மூர்த்திகள் இக்கோவிலில் உள்ளது.

இக்கோவிலில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 40-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா வருதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ செண்பகா தேவி அம்மன், ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இதன் பின்னர், சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. சனிக்கிழமை மாலை செண்பகாதேவி அம்மன் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை செண்பகாதேவி அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கிராம மக்கள் வாடை பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில், தாமரைப்பாக்கம், அம்மணம் பாக்கம், வெள்ளியூர், திருவள்ளூர், செங்குன்றம், ஆரணி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அனைத்து பக்தர்களுக்கும் தாலி கயிறு, மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com