40 ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த லக்சன்

ஆஸ்திரேலிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நியூசிலாந்து சென்றடைந்தார்.
pm modi
Published on

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக, இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை சந்தித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீசை சந்தித்த பிரதமர் மோடி இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார்.

தலைநகர் ஆக்லாந்து சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

இந்தப் பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். நியூசிலாந்து வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com