ஊரடங்கு சமயத்தில் பாஜக எம்பி மனைவி இப்படி செய்தாரா?

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பாஜக எம்பி மனைவி அப்படி செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
சுஜாதா மொண்டால் கான்
சுஜாதா மொண்டால் கான்
Published on

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், பாஜக எம்பி மனைவி விமானத்தில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநில பணியாளர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பிஷ்னுபூர் பகுதிக்கான பாஜக எம்பி சௌமித்ரா கான் மனைவி ஊரடங்கு சமயத்தில் கொல்கத்தாவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்ததாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. 

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் அவை உண்மையில்லை என தெரியவந்துள்ளது.  உண்மையில் பாஜக எம்பி சௌமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டால் கான் தனது வலைதளத்தில் அவர், ஏற்கனவே விமானத்தில் பயணம் செய்த போது எடுத்த பழைய புகைப்படங்களை பதிவிட்டார். ஊரடங்கு சமயத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

அந்த வகையில் ஊரடங்கு சமயத்தில் பாஜக எம்பி மனைவி விமானத்தில் பயணம் செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com