உங்க கனவ சொல்லுங்க... எனக்கு நயன்தாரா வேண்டும் - சி.வி.சண்முகம் பேச்சால் சர்ச்சை| Nayanthara

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
உங்க கனவ சொல்லுங்க... எனக்கு நயன்தாரா வேண்டும் - சி.வி.சண்முகம் பேச்சால் சர்ச்சை| Nayanthara
Published on: 

சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அப்போது அ.தி.மு.கவினர் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை விமர்சித்தார். அவர் பேசியதாவது:- அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். முதலமைச்சர் அதைவிட ஒரு படி போய் உங்க கனவ சொல்லுங்க என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும், கனவை நிறைவேற்றுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

சி.வி.சண்முகத்தின் இந்த சர்ச்சை பேச்சு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com