கிண்டி சிறுவர் பூங்காவுக்கு இன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 12-ந்தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் இயங்காது என்று தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவுக்கு இன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 12-ந்தேதி (இன்று) அன்று ஒரு நாள் மட்டும் இயங்காது. எனவே பார்வையாளர்களுக்கு இன்று அனுமதி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்கா அருகில் உள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைரவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்க உள்ளார். காவிரி பிரச்சினையில் அவருக்கு எதிராக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காகவே கிண்டி சிறுவர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com