விவசாயம் செழிக்க அணைகள் தந்த மாமனிதர் காமராஜர்..!- இ.பி.எஸ் புகழாரம்

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை ஒட்டி இபிஎஸ் எக்ஸ் பதிவு.
Edappadi pazhanisamy
Published on

இந்தியாவின் முன்னாள் முதலமைச்சரும்,‘கல்வி கண் திறந்தவர்’ என்று அழைக்கப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,

பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,

என தமிழகத்தின் கல்விக்கண்

திறந்த கர்மவீரர் ..,

நாடு நலம் பெற,

விவசாயம் செழிக்க,

அணைகள் பலதந்த மாமனிதர்..,

தமிழகத்தின்

வளர்ச்சிக்கு வித்திட்ட,

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com