தமிழக பயணத்தில் வாயிலேயே வடை சுட்டு இருக்கிறார் மோடி

தி.மு.க.வை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
தமிழக பயணத்தில் வாயிலேயே வடை சுட்டு இருக்கிறார் மோடி
Published on

சென்னை:

சென்னையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

பிரதமர் மோடி தமிழ் நாட்டிலேயே தங்கி பிரசாரம் செய்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா வெற்றி பெறாது. பிரதமர் மோடி மட்டுமல்ல அவரது தாத்தா வந்தாலும் தி.மு.க.வை தொட்டுப் பார்க்க முடியாது.

70 ஆண்டுகளாக தி.மு.க.வை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். பிரதமர் மோடி 2 நாட்கள் தமிழகத்திலேயே தங்கி வாயிலேயே வடை சுட்டு இருக்கிறார்.

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் உதயசூரியனுக்கு ஓட்டு போடும் அளவுக்கு தெளிவானவர்கள்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com