வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் 5-ந்தேதி மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள்.ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அ.திமு.க. சார்பில் மரியாதை.
வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் 5-ந்தேதி மாலை அணிவித்து மரியாதை
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த நாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அ.திமு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, கடம்பூர் ராஜூ, ப. மோகன், சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com