

சென்னை:
த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, 5 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகள் கழித்தும் த.வெ.க. ஆட்சி தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
த.வெ.க. ஆட்சிக்கு வராது என்று கூட தான் சொன்னார்கள். நாங்கள் ஆட்சி அமைத்துவிட்டோம்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கோவை சிறுமி பாலியல் கொலை சம்பவத்திலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோழமை கட்சிகளாக இருந்தவர்களை பண்ணையார் மனப்பான்மையுடன் தி.மு.க. சாடுகிறது என்றார்.