சர்வதேச விமான சேவைக்கு நவம்பர் 30 வரை தடை நீட்டிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமான சேவை
விமான சேவை
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பவும் இங்கு சிக்கிய வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்காக  மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும், திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை  அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், சர்வதேச விமான சேவைக்கான தடை வரும் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com