இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

சென்னையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. மத்திய அரசு மவுனம் சாதிக்காமல் உடனே இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com