காங்கிரசில் இருந்து விலகிய பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கையோடு உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார். #PriyankaChaturvedi #CongressSpokesperson
காங்கிரசில் இருந்து விலகிய பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
Published on

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் கட்சியின் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தவர் பிரியங்கா சதுர்வேதி. இவர் சில நாட்களுக்கு முன் மதுராவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது சில காங்கிரஸ் நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் நீக்கப்பட்டு, பின்னர் தேர்தலுக்காக மீண்டும் கட்சியில்  சேர்க்கப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளார். தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கையோடு பிரியங்கா சதுர்வேதி இன்று மும்பை வந்தார். அங்குள்ள சிவசேனா கட்சி தலைமையகத்தில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். #PriyankaChaturvedi #CongressSpokesperson

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com