தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாம் போராட வேண்டிய காலம் இது: இஸ்ரேலில் பிரதமர் மோடி பேச்சு

தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டிய காலம் இது என்று இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாம் போராட வேண்டிய காலம் இது: இஸ்ரேலில் பிரதமர் மோடி பேச்சு
Published on

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். ஜெருசலேம் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.

இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி, டேன்சிகர் பூ பண்ணை, யெட் வாஷம் ஹோலோகாஸ்ட் நினைவிடத்திற்கு சென்றார். அதைத்தொடர்ந்து தியோடர் ஹெர்சல் நினைவகத்திற்கு திடீர் வருகை புரிந்தார். பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மனிதம் மற்றும் நாகரீக மதிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக போராட முன்வர வேண்டும். அதற்கான காலம் இது என்று பிரதமர் மோடி பேசினார். உலத்தையே உலுக்கி வரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றுசேர வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com