

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்- உடுமலை பூக்கடை சந்திப்பில் அ.தி.மு.க. இரு அணிகள் இணைந்ததால் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் துரைசாமி ஓ.பி.எஸ்.சை வாழ்த்தி பிளக்ஸ் பேனரை வைத்தார்.
இதனை இன்று காலை அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் பார்த்தபோது ஓ.பி.எஸ். படம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கட்சியினர் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் பிளக்ஸ் பேனரை கிழித்த நபர்களை தேடி வருகிறார்கள்.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இணைந்து விட்டாலும் தாராபுரத்தில் பிரிந்து சென்ற கட்சியினர், ஆதரவாளர்கள், பொறுப்பாளர்கள் இன்னும் சேராமல் எதிரும் புதிருமாகவே உள்ளனர் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.