"தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது"- பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 நண்பகல் 12.05-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
PM Modi
Published on

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனியார் ராக்கெட்

தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 11.30 மணிக்கு ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது.

உடனடியாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து 20 நிமிட கவுண்டவுன் மீண்டும் தொடங்கியது. 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-1 நண்பகல் 12.05-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக பாய்ந்த விக்ரம்-1

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 எடுத்துச்சென்ற செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது.

விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான 'காஸ்மிக் புளூம்' மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.

விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற சிறு செயற்கைக்கோள்கள் நிர்ணயித்த தூரம், புவிவட்டப்பதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் விஞ்ஞாணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் அவர்," விக்ரம்-1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விக்ரம்-1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது" என்று விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்துள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com