பிரதமர் இல்லத்தில் பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் முக்கிய ஆலோசனை

என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதியன்று நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்.
பிரதமர் இல்லத்தில் பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் முக்கிய ஆலோசனை
Published on

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சித் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்களின் முக்கிய கூட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்றது.

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு பொது் செயலாளர் பி.எல். சந்தோஷும் கலந்துகொண்டார்.

அமைச்சரவை மாற்றம்:

கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பா.ஜ.க.வின் தேசிய பொறுப்பாளர்கள் குழுவிலும், மத்திய அமைச்சரவையிலும் மாற்றங்கள் குறித்த பரபரப்புகள் நிலவி வரும் வேளையில் இந்த கூட்டம் நிகழ்ந்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர்:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டணி அவையின் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதியன்று நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com