கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை- கமல்ஹாசன்

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் குறித்து ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம்.

பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com