கோவா மாநிலத்தில் இன்று முதல் மக்கள் ஊரடங்கு- வெள்ளி, சனி, ஞாயிறு முழு ஊரடங்கு

கோவாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Published on

பனாஜி:

கோவாவில் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவில் பரவாத நிலையில், கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. 

கொரோனாவால் இதுவரை 2753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் பலியாகி உள்ளனர். 1607 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா  சமூக பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்வர்  பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 

அத்துடன் இந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் முழு  ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com