கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 கைதிகள் தப்பி ஓட்டம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
ஐதராபாத் கமிஷனர் அஞ்சனி குமார்
ஐதராபாத் கமிஷனர் அஞ்சனி குமார்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி சிறையில் உள்ள கைதிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடத்தில், 2வது தளத்தில் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கைதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். 

பலத்த பாதுகாப்பையும் மீறி தப்பிச் சென்ற அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com