வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்: தினகரன்

ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.
வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்: தினகரன்
Published on

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்வதோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.

வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com