

மக்கள் நலனை புறக்கணிக்கும் மதவாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், மதநல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறைகூவலை ஏற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை நீர்த்து போகும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் சுதேசி மில் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சுதேசி மில்லை யொட்டி பிரமாண்ட சாமியான பந்தல் அமைக்கப்பட்டு சேர்கள் போடப்பட்டிருந்தன. காலை 8.30 மணி அளவில் புதுவையின் பல்வேறு பகுதியில் இருந்து காங்கிரசார் உண்ணாவிரத பந்தலில் கூட தொடங்கினர்.
காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு.