

‘பாலன்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘பாலன்: தி பாய்’. 'ஆவேஷம்' மற்றும் 'ரோமஞ்சம்' படங்களின் இயக்குநரான ஜித்து மாதவன் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் டொவினோ தாமஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பெண்கள் சீர்திருத்தப் பள்ளியிலேயே பிறந்து, தன் தாயால் வளர்க்கப்படும் 'பாலன்' என்ற சிறுவனின் கதை இது. அங்கிருந்து வெளியேறிய பிறகு, தங்களின் கடந்த காலப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க அவனது தாய் தங்களது பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். "யாரையும் நம்பாதே" என்ற ஒரு முக்கியப் பாடத்தை பாலனுக்கு அவன் தாய் கற்றுக்கொடுக்கிறார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தாயும் மகனும் பிரிய நேரிடுகிறது. 'அப்பாஸ்' என்ற நபர் பாலனுக்கு உதவ முன்வருகிறான். தாய் கற்பித்த பாடங்களை மனதில் கொண்டு, பல சவால்களைக் கடந்து பாலன் தன் தாயைத் தேடிச் செல்லும் இந்த த்ரில்லர் பயணம், பயமும் மர்மமும் நிறைந்த ஒரு சுழலில் முடிகிறது.
ஃபர்சானா பாலத்திங்கல், ஆதிஷேஷன் கே.ஆர்., முகமது ஜினான் உள்ளிட்டோர் நடித்து இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ‘பாலன்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘பாலன்’ திரைப்படம் வருகிற 31-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.