search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கோரிக்கை விடுத்த பேடிஎம்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு
    X

    கோரிக்கை விடுத்த பேடிஎம்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு

    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
    • பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

    பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.

    தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.

    Next Story
    ×