search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மியின் முதல் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    ரியல்மியின் முதல் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமராக்கள் உள்ளன.
    • நோட் 50 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது நோட் 50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் நோட் 50 ஸ்மார்ட்போன் ரியல்மியின் முதல் நோட் சீரிஸ் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நோட் 50 மாடலில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, யுனிசாக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

    அதன்படி ரியல்மி நோட் 50 மாடலில் 6.74 இன்ச் IPS LCD பேனல், HD+ ரெசல்யூஷன் 1600x720 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி நோட் 50 அம்சங்கள்:

    6.74 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    யுனிசாக் T612 பிராசஸர்

    மாலி G57 GPU

    4 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. டி எடிஷன்

    13MP பிரைமரி கேமரா, BW டெப்த் சென்சார்

    எல்.இ.டி. ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    ரியல்மி நோட் 50 ஸ்மார்ட்போன் ஸ்கை புளூ மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் பிலிப்பைன்ஸ் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகமாகும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. அப்போதே இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் தெரியவரும்.

    Next Story
    ×