search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பட்ஜெட் விலையில் 2 புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி
    X

    பட்ஜெட் விலையில் 2 புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி

    • ரியல்மி 12 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். உள்ளது.
    • இரு மாடல்களிலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி 12 5ஜி மற்றும் ரியல்மி 12 பிளஸ் 5ஜி என அழைக்கப்படும் புதிய மாடல்களில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேக்கள், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், அதிகபட்சம் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 12 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ ஸ்கிரீன் டைனமிக் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

    Arm மாலி-G57 MC2 GPU

    6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ.

    108MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 12 பிளஸ் 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிளஸ் பிராசஸர்

    Arm மாலி-G68 MC4 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய ரியல்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் டுவிலைட் பர்பில் மற்றும் வுட்லேண்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பயனீர் கிரீன் மற்றும் நேவிகேட்டர் பெய்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×