search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    200MP கேமராவுடன் பிஐஎஸ் தளத்தில் லீக் ஆன ஸ்மார்ட்போன்
    X

    200MP கேமராவுடன் பிஐஎஸ் தளத்தில் லீக் ஆன ஸ்மார்ட்போன்

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த மாத துவக்கத்தில் புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், 200MP பிரைமரி கேமரா, OIS, 180 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், பிரபல டிப்ஸ்டர் பரஸ் குக்லனி இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறார். புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் X6820 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவ அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இதன் அம்சங்கள் அனைவரும் அறிந்ததே.

    இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா அம்சங்கள்:

    6.8 இன்ச் FHD+ AMOLED 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12

    200MP பிரைமரி கேமரா, OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP சென்சார்

    32MP செல்பி கேமரா

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    180 வாட் தண்டர் சார்ஜ் தொழில்நுட்ரம்

    5ஜி, எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்

    Next Story
    ×