search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வெறும் 3 பொருட்கள் போதும் ஸ்பானிஷ் சூறோஸ் ரெடி...!
    X

    வெறும் 3 பொருட்கள் போதும் ஸ்பானிஷ் சூறோஸ் ரெடி...!

    • சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக். இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ஸ்பெயினில் உள்ள ஆடு மேய்பவர்களே. `சூறா' இன ஆடுகளின் கொம்புகளின் வடிவத்தில் இருப்பதால், இந்த இனிப்பிற்கு `சூறோஸ்' என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்.

    நெய்- 2 தேக்கரண்டி.

    சக்கரை- 2 தேக்கரண்டி.

    உப்பு- கால் தேக்கரண்டி.

    மைதா மாவு- 125 கிராம்

    சக்கரை- கால் கப்.

    ஏலக்காய் தூள்- கால் தேக்கரண்டி.

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு 250 கிராம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி சக்கரை, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை இறக்கி விட்டு அதில் ஒரு கப் மைதா மாவு சேர்க்க வேண்டும். மாவை சேர்த்தவுடன் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும்.

    இப்போது மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதை கைகளால் நன்றாக பிசைய வேண்டும். இப்போது மாவு தயார்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி தயாராக வைத்திருக்கும் மாவை பைப்பிங் பேக்கில் போட்டு சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். நன்றாக கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் அதனை எடுத்து விட வேண்டும்.

    சக்கரையை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பவுடர் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஒரு பவுலில் கால் கப் சக்கரை, அத்துடன் கால் தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துவிட்டு இரண்டையும் நன்றாக கலந்துவிட்டு பொரித்து வைத்திருக்கும் சூறோசை அதில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூறோஸ் தயார். இதை நியூட்ரெல்லா அல்லது கட்டியான சாக்லேட் சாசுடன் பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும். இனி சூறோஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்க, விரும்பி சாப்பிடுவார்கள்.

    Next Story
    ×