search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்னை சிட்டி கேங்க்ஸ்டராக மாறிய வைபவ்
    X

    சென்னை சிட்டி கேங்க்ஸ்டராக மாறிய வைபவ்

    • ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்
    • டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களில் வலம் வருபவர் நடிகர் வைபவ். சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் தயாரித்தது. மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

    பின் பிப்ரவரி மாதம் வெளியான ரணம் அறம் தவறேல் படத்தில் ஷெரிஃப் இயக்கத்தில் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் வைபவின் அடுத்த படமான சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    மோஷன் போஸ்டரில் ஒரு கூட்டம் வங்கியை திருடிக் கொண்டு இருக்கின்றனர். பின் அவர்களின் பெயர்கள் போலிஸ் தேடும் முக்கிய குற்றவாளி பட்டியலில் இருக்கிறார்கள். பின் அவர்களை போலீஸ் துரத்துவது போன்ற காட்சிகள் மோஷன் போஸ்டரில் அமைந்துள்ளது. சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஒரு நல்ல காமெடி படமாக அமையும் என எதிர் பார்க்கப் படுகிறது. படம் வெளியிடும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×