search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவுக்காக என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் - வோக்ஸ்வேகன் திட்டம்
    X

    கோப்புப்படம்

    இந்தியாவுக்காக என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் - வோக்ஸ்வேகன் திட்டம்

    • புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம்.
    • வோக்ஸ்வேகன் இந்தியா தலைமை செயல் அதிகாரி பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

    வோக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வோக்ஸ்வேகன் நிறுவனம் முலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில் வோக்ஸ்வேகன் நிறுவனம் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து பாரத் மொபிலிட்டி நிகழ்வில் தனியார் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

    கோப்புப்படம்


    அப்போது பேசிய அவர், "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன யுக்தி எங்களது ஐ.சி. என்ஜின் மாடல்களுக்கான யுக்திகளை விட அதிக வித்தியாசமாக இருந்துவிடாது. இதனால், இந்திய சந்தைக்கு ஏற்றவகையிலும், சர்வதேச வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துவோம். புதிய எலெக்ட்ரிக் வாகனம் என்ட்ரி லெவல் பிரிவில் நிலைநிறுத்தப்படும்."

    "எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக வோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் பல மில்லியன் யூரோக்கள் அடங்கிய பெரும் தொகை முதீலடு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டை நியாயப்படுத்தும் வகையில், புதிய வாகனங்களை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது பற்றி திட்டமிடுவோம்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×