search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மூன்று எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் மாருதி சுசுகி

    • மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பலேனோ, ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் இதர கார் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷன்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது.

    இவைதவிர மாருதி நிறுவனம் தனது வாகனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் முற்றிலும் புதிதாக எட்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எஸ்.யு.வி.-க்கள், எம்.பி.வி.-க்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.


    இதில் ஒரு மாடல் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. என்றும் இது YMC எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து பார்ன்-இவி (Born EV) ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி வருகின்றன.

    இதை கொண்டு பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும். இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் எம்.பி.வி. மாடல் தான் YMC எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது என்றும், இந்த மாடல் eVX அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது மாருதி YMC மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி.-யாக இருக்கும்.

    மாருதியின் புதிய எம்.பி.வி. மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இதில் 40 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் ரேன்ஜ் மாருதி eVX மாடலுக்கு இணையாக 550 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×