search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    டாடா ஹேரியர் EV இந்திய வெளியீடு - லீக் ஆன புது தகவல்
    X

    டாடா ஹேரியர் EV இந்திய வெளியீடு - லீக் ஆன புது தகவல்

    • விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • டாடா எலெக்ட்ரிக் கார்களில் இதுபோன்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV மாடலை காட்சிக்கு வைத்தது. கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் EV மாடலுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது காப்புரிமை பெற்று இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    காப்புரிமை படங்களின் படி ஹேரியர் EV மாடல் சமீபத்திய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் புதிய அலாய் வீல்கள், டெயில் கேட் பகுதியில் ஹேரியர் EV என்ற பேட்ஜ்-க்கு மாற்றாக .ev என்ற பேட்ஜிங் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்திய டாடா எலெக்ட்ரிக் கார்களில் இவ்வாறான வழக்கம் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.


    இந்த காரின் தோற்றம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், அந்த வெர்ஷனில் உள்ள அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஹேரியர் EV மாடலின் முன்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    டாடா ஹேரியர் EV மாடல் பலவித பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கிடைக்கும் என தெரிகிறது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த கார் டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய Acti.EV பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ. 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் மஹிந்திரா XUV.e8, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    Next Story
    ×