search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட 2024 ரேன்ஜ் ரோவர்  எவோக்
    X

    இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட 2024 ரேன்ஜ் ரோவர் எவோக்

    • புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலை அப்டேட் செய்திருக்கிறது. புதிய 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலின் விலை ரூ. 67 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் 2024 எவோக் மாடல் ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டிசைனை பொருத்தவரை 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் கூப் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் ஃபுளோட்டிங் ரூஃப், புது டிசைன் கொண்ட முன்புற கிரில், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்கள், டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் காரிந்தியன் பிரான்ஸ் மற்றும் டிரைபெகா புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.


    உள்புறம் 11.4 இன்ச் கர்வ்டு கிளாஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பிவி ப்ரோ தொழில்நுட்பம், கிளைமேட் கன்ட்ரோல், ஹீடெட் மற்றும் வென்டிலேஷன் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், கேபின் ஏர் பியூரிஃபயர், 3டி சரவுன்ட் வியூ உள்ளது.

    புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இவை முறையே 247 ஹெச்.பி. பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 201 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன.

    Next Story
    ×