இந்தியா

ஊடகவியலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

Published On 2024-05-07 03:48 GMT   |   Update On 2024-05-07 06:17 GMT
  • திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும்.
  • கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும்போது ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அகமதாபாத்:

உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிக்கு வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி,

இந்தியாவின் தேர்தல் செயல்முறை, தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது. சுமார் 64 நாடுகளில் தேர்தல்கள் நடக்கின்றன. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்து ஒப்பிடவேண்டும்.

இந்த தேர்தல் ஆண்டு ஜனநாயகத்தின் கொண்டாட்டம் போன்றது. திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும்போது ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உங்களுக்கு ஆற்றலையும் தரும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

Similar News