இந்தியா

3-ம் கட்ட வாக்குப்பதிவு... காலை 11 மணி நிலவரப்படி 25.41 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-05-07 06:33 GMT   |   Update On 2024-05-07 06:33 GMT
  • கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
  • மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதே போல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

குஜராத்தின் போர்பந்தரில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாக்களித்தார்.

அகமதாபாத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி வரிசையில் நின்று வாக்களித்தார்.

மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வாக்களித்தார்.

மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

தெற்கு கோவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அசாம் - 27.34 சதவீதம்

பீகார் - 24.41 சதவீதம்

சத்தீஸ்கர்- 29.90 சதவீதம்

கோவா- 30.94 சதவீதம்

குஜராத்- 24.35 சதவீதம்

மத்திய பிரதேசம் - 30.21 சதவீதம்

கர்நாடகா- 24.48 சதவீதம்

மகாராஷ்டிரா- 18.18 சதவீதம்

உத்தரபிரதேசம்- 26.12 சதவீதம்

மேற்கு வங்கம்- 32.82 சதவீதம்

Tags:    

Similar News