search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்
    X

    புதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் ஐ.ஓ.எஸ். அப்டேட் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மைஜியோ செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருந்த நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பிற்கான அப்டேட் மூலம் சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான மைஜியோ செயலியில் வாடிக்கையாளர்கள் பே.டி.எம். அல்லது ஜியோமனி வாலெட் கணக்குகளை கொண்டு பணம் செலுத்த முடியும். மைஜியோ ஐ.ஓ.எஸ். செயலியின் புதிய அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி சில பிழை திருத்தங்கள் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மைஜியோ செயலி 4.0.04 பதிப்பு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் சலுகையை ரூ.399க்கு வழங்குகிறது. இத்துடன் 70 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் பே.டி.எம். மற்றும் ஜியோ மனி சேவைகளை கொண்டு பிரீபெயிட் ரீசார்ஜ், போஸ்ட்பெயிட் கட்டணம் உள்ளிட்டவற்றை வாலெட் கணக்குகளில் இருந்து மேற்கொள்ள முடியும்.

    இத்துடன் ஜியோஃபைபர் மற்றும் ஜியோஃபை சாதனங்களை மிக எளிமையாக இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஜியோ ஃபைபர் அல்லது ஜியோஃபை நெட்வொர்க்குடன் இணைத்து சேவைகளை மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் கட்டுப்படுத்த முடியும்.

    மைஜியோ ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஹெல்லோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி காணப்பட்டது என்னும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இன்னும் வழங்கப்படவில்லை.  
    Next Story
    ×