search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிளாக்பெரி முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட் நிறுத்தம்
    X

    பிளாக்பெரி முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட் நிறுத்தம்

    பிளாக்பெரி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட்களை நிறுத்திக் கொள்வதாக பிளாக்பெரி அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கனடா நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெரி தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான ப்ரிவ், மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

    மேலும் ப்ரிவ் அல்லது பிளாக்பெரி 10 சாதனம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பிளாக்பெரி கீ ஓன் சாதனத்திற்கு மாற்றி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு தங்களது சாதனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு கீ ஓன் சாதனம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகிறது.

    எனினும் ப்ரிவ் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் பட்சத்தில் மென்பொருள் அப்டேட் மூலம் அவை சரி செய்யப்படும் என பிளாக்பெரி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக்பெரி ப்ரிவ் சாதனத்திற்கு வழங்கப்பட்ட வாரண்டி இறுதி வரை பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது.



    இந்தியாவில் பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.62,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக பிளாக்பெரி ப்ரிவ் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போனில் 5.4 இன்ச் டூயல் வளைந்த WQHD பிளாஸ்டிக் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 808, ஹெக்சா கோர், 64-பிட் பிராசஸர், அட்ரினோ 418 GPU, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியை வழங்குகிறது.

    பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போனின் கீபோர்டு, டிராக்பேட், 18 எம்பி டூயல் பிளாஷ் கேமரா, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 3410 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 
    Next Story
    ×