search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதுவரவு: ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்லெட்
    X

    புதுவரவு: ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்லெட்

    ஹூவாய் நிறுவனம் தனது டேப்லெட் சாதனங்களில் புதிய மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மீடியாபேட் எம்3 லைட் 10 என அழைக்கப்படும் புதிய டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுனவம் மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹார்மன் கார்டன் ஆடியோ லேப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய டேப்லெட் சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஆடியோ அனுபவம் கிடைக்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது.  

    இத்துடன் SWS 3.0 சவுண்டு அமைப்பு கொண்ட குவாட்-ஸ்பீக்கர்கள், EMUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மென்பொருள் மேம்படுத்தல்களை பொருத்த வரை சிறப்பான மல்டி டாஸ்கிங் அனுபவத்தை வழங்கும் ஸ்ப்லிட்-ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. 

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை மீடயாபேட் எம்3 லைட் 10 டேப்லெட்டில் 10.1 இன்ச் ஃபுல் எச்டி 1920x1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 



    மூன்று வித ரேம் மாடல்களில் கிடைக்கும் மீடியாபேட் எம்3 லைட் 10, 3ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    8 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களை கொண்டுள்ள மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்லெட் 6660 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த தகவல்களை ஹூவாய் வழங்கவில்லை.
    Next Story
    ×