search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் ஆன்லைன் மூலம் ரூ.310 கோடிக்கு ஏலம் போன 2 சரக்கு விமானங்கள்
    X

    சீனாவில் ஆன்லைன் மூலம் ரூ.310 கோடிக்கு ஏலம் போன 2 சரக்கு விமானங்கள்

    சீனாவில் பிரபலமான ‘அலி பாபா’ ஆன்லைன் நிறுவனம் மூலம் சரக்கு விமானங்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 2 விமானங்களை ரூ.310 கோடிக்கு ஏலம் போனது.
    பெய்ஜிங்:

    ‘ஆன்லைன்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமானங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    ஆச்சரியமூட்டும் இச்சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் ஒரு தனியார் சரக்கு விமான போக்குவரத்து நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 3 சரக்கு விமானங்கள் ஜப்தி செய்யப்பட்டன.

    அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்து கடனுக்குரிய பணத்தை திரும்ப செலுத்த முடிவு செய்யப்பட்டது. 6 தடவை முயற்சி மேற்கொண்டும் அவற்றை விற்க முடியவில்லை.எனவே ஆன்லைன் மூலம் விமானங்களை விற்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சீனாவில் பிரபலமான ‘அலி பாபா’ ஆன்லைன் நிறுவனம் மூலம் சரக்கு விமானங்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 2 விமானங்களை ‘எஸ். எப். ஏர்லைன்ஸ்’ நிறுவனம் ரூ.310 கோடிக்கு ஏலம் போனது.



    ஒரு விமானம் மட்டும் ஏலம் போகவில்லை. ஏனெனில் அதை ஏலம் எடுக்க ஒரு நிறுவனம் மட்டுமே பதிவு செய்து இருந்தது.
    Next Story
    ×