search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு: இரண்டாவது நபர் கைது
    X

    லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு: இரண்டாவது நபர் கைது

    லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    லண்டன்:

    லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். (உள்ளூர் நேரப்படி) 8.20 மணியளவில்  கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.

    சப்தம் கேட்டு உயிர் பயத்துடன் ஓடிய பயணிகளில் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுபேற்றது. தங்கள் இயக்கத்தை சேர்ந்த மாவீரர் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அமாக் இணையதளம் குறிப்பிட்டிருந்தது.

    லண்டன் சுரங்க ரெயில் தாக்குதல் தொடர்பாக முக்கியமான நபரை கைது செய்துள்ளதாக லண்டன் போலீசார் நேற்று தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடையை மேலும் ஒருவரை நேற்று பின்னிரவு போலீசார் கைது செய்தனர். லண்டன் புறநகர் பகுதியான ஹவுன்ஸ்லோ என்ற இடத்தில் அந்நபர் பிடிபட்டதாகவும், தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
    Next Story
    ×