search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் சுரங்க ரெயிலில் வெடி விபத்து - ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
    X

    லண்டன் சுரங்க ரெயிலில் வெடி விபத்து - ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

    லண்டன் சுரங்க ரெலியில் நேற்று காலை நடந்த வெடி விபத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

    லண்டன்:

    லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். (உள்ளூர் நேரப்படி) காலை 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. 

    இந்த சம்பவத்தில் சுமார் 29 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தகவலை அந்த அமைப்பின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


    Next Story
    ×