search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒபாமா மீதான குற்றச்சாட்டுக்கு அமெரிக்க நீதித்துறை மறுப்பு
    X

    ஒபாமா மீதான குற்றச்சாட்டுக்கு அமெரிக்க நீதித்துறை மறுப்பு

    ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின்போது தனது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இப்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மீது தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒரு அதிரடி குற்றச்சாட்டை கடந்த மார்ச் மாதம் முன்வைத்தார்.

    அதாவது, அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தனது தொலைபேசி உரையாடல்களை (டிரம்ப் டவரில் இருந்து) அப்போதைய ஜனாதிபதி ஒபாமா, இடைமறித்து கேட்டு பதிவு செய்தார், இது நிக்சனின் வாட்டர் கேட் ஊழல் போன்றது என்று டிரம்ப் கூறினார்.

    இந்த குற்றச்சாட்டு அமெரிக்க அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் டிரம்பின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இப்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுபற்றி நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 4-ந் தேதி டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின்படி, அவரது தொலைபேசி பேச்சு இடைமறித்து பதிவு செய்யப்பட்டது என்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யும், தேசிய பாதுகாப்பு பிரிவு என்.எஸ்.டி.யும், எந்தவொரு ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

    இது முன்னாள் ஜனாதிபதி ஒபாமா குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக அமைந்து உள்ளது. அதே நேரத்தில் அவர் மீது குற்றம் சாட்டிய டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×