search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிபியா நாட்டில் 11 பேர் தலை துண்டிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்
    X

    லிபியா நாட்டில் 11 பேர் தலை துண்டிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்

    லிபியா நாட்டின் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இடுபட்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்து கொன்றனர்.
    திரிபோலி:

    ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமல்லாது அரபு நாடுகள் பலவற்றிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்றி இருக்கிறார்கள். அதில் லிபியா நாடும் ஒன்று.

    அங்குள்ள கடலோர மாவட்டங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தலைநகரம் திரிபோலிக்கு தெற்கே காலிபா கப்தார் என்ற இடம் உள்ளது. இங்கு ராணுவ சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.

    இந்த சோதனை சாவடியில் 9 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் 9 பேருடைய தலையையும் துண்டித்து கொன்றார்கள்.மேலும் அங்கிருந்த பொதுமக்களில் 2 பேரையும் பிடித்து அவர்கள் தலையையும் வெட்டினார்கள்.

    ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட வி‌ஷயம் அறிந்ததும் கூடுதல் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதற்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அவர்களை பிடிப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×