search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் 6 லட்சம் ஆண்டுக்கு பிறகு வெடிக்க தயாராகும் சூப்பர் எரிமலை
    X

    அமெரிக்காவில் 6 லட்சம் ஆண்டுக்கு பிறகு வெடிக்க தயாராகும் சூப்பர் எரிமலை

    அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளது. அப்போது வெளியாகும் சாம்பல், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பையும், மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்.
    வாஷிங்டன்:

    உலகின் 20 சூப்பர் எரிமலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று எல்லோஸ்டோன் கால்டெரா. இது அமெரிக்காவில் வியோமிங் பகுதியில் ஹைடன் பள்ளத்தாக்கில் எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் அமைத்துள்ளது.

    இந்த சூப்பர் எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்போது வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பையும், மனிதர்களின் உடல் நலனுக்கு கேடுகளையும் விளைவிக்கும்.

    தற்போது இந்த எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளது. தற்போது அதில் இருந்து 60 முதல் 70 சதவீதம் வரை வெப்பம் வெளியாகி கொண்டிருக்கிறது. கடுமையான அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘எல்லோஸ்டோன்’ எரிமலை வெடித்தால் கடந்த 1980-ம் ஆண்டு செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை வெடித்ததை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அதனால் பூமிக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே எல்லோஸ்டோன் கால்டெரா எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீட்டர் ஆழத்துக்கு துளையிட்டு அதனுள் தண்ணீரை பீய்ச்சி அடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் எரிமலை குளிர்ச்சி அடைந்து வெளியாகும் வெப்பதன்மை குறையும் என கருதப்படுகிறது. அதற்காக ரூ.23 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
    Next Story
    ×