search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகாகோவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் புகழாரம்
    X

    சிகாகோவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் புகழாரம்

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.

    இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஒரு செய்தி விடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    அமெரிக்காவில் இந்துக்களும், இந்திய வம்சாவளியினரும் செய்துள்ள மாற்ற முடியாத பங்களிப்புக்கு நன்றி.

    அமெரிக்காவும், இந்தியாவும் பரஸ்பரம் ஜனநாயகம், பாதுகாப்புக்கான மதிப்புகளுக்கு பெரும் மரியாதை கொண்ட ஒரு நட்புறவை பற்றிக்கொண்டுள்ளன.

    எமது மதிப்புமிக்க கூட்டாளித்துவ எதிர்காலம் ஒருபோதும் பிரகாசமாக பார்க்கப்பட்டது இல்லை. ஆனால் நாம் எதிர்கால தலைமுறையினருக்காக இன்னும் கூடுதலான ஒத்துழைப்பை ஊக்குவிப்போம்.

    இந்த அற்புதமான மைல்கல்லை (இந்தியாவின் 71-வது சுதந்திர தின கொண்டாட்டம்) இந்திய மக்களுக்காக நாம் கொண்டாடும் வேளையில், நமது மாபெரும் தேசத்தின் தன்மையை வடிவமைப்பதில், செல்வாக்குடன் திகழ்ந்த அனைத்து இந்துக்களையும், இந்திய வம்சாவளியினரையும் அங்கீகரிக்கிறோம்.

    இவ்வாறு டிரம்ப் அதில் கூறி உள்ளார்.

    இந்த விழாவில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் கவர்னர் புரூஸ் ரானர் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “அமெரிக்காவை நிறத்தால், இசையால், உணவால், நடனத்தால் செம்மைப்படுத்தியதில் இந்திய வம்சாவளியினர் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

    இந்த விழாவில் மிகா சிங்கின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

    Next Story
    ×