search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரடி பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
    X

    நேரடி பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

    இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என்றும் கூறுகிறது. ஆனால், இருதரப்பும் ராணுவத்தை திரும்ப பெற்றால்தான் பேச்சுவார்த்தை என இந்தியா கூறிவிட்டது. இதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

    இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கேரி ராஸ் கூறுகையில், ‘டோக்லாம் பதற்றத்தை தணிக்க, இந்தியாவும் சீனாவும் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்றார்.

    இந்த பதற்றமானது அதிகரிக்கலாம் என பென்டகன் அஞ்சுகிறதா? என்று கேட்டபோது, ‘இந்த விஷயம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு அந்த அரசாங்கங்களை கேட்டுக்கொள்ளுங்கள். அதுபோன்ற விஷயங்களை நாங்கள் யூகிக்கப் போவதில்லை’ என்றார் ராஸ்.

    கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறையும் இதே கருத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×