search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தாருக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்திய அரபு நாடுகள்
    X

    கத்தாருக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்திய அரபு நாடுகள்

    கத்தாருக்கு விதித்த 13 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை கைவிட்டதாக சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் அறிவித்துள்ளது.
    ரியாத்:

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தாருக்கும் அதையொட்டியுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட், பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

    கத்தார் நாடு ஈரான் மற்றும் துருக்கிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது மற்ற நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எனவே கத்தாரை அச்சுறுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு பல்வேறு தடைகளை 4 நாடுகளும் விதித்தன.

    இந்த தடைகளை விலக்கி கொள்ள வேண்டும் என்றால், தாங்கள் சொல்லும் 13 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். ஆனால் அந்த நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்துவிட்டது.

    அந்த நாடுகளின் பொருளாதார தடையால் கத்தார் கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவற்றின் விலை எகிறியது.

    இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்தன. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தும்படி வற்புறுத்தி வந்தன. இதன் ஒரு அங்கமாக 4 நாடுகளும் ஏற்கனவே விதித்த 13 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை கைவிட்டு விட்டதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×